Facebook பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்



நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.
Facebook இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங் தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது.
லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.
 இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விடயமாகும். “உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும்” என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும் அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.


thanks http://www.tamilulakam.com


You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...