ஃபேஸ்புக் இணையதளம் பயனர்களின் பாதுகாப்பினை இன்னும் வலுவடையச் செய்கின்றது



சோஷியல் நெட்வேர்க்குகளின் மன்னனான ஃபேஸ்புக் இணைய தளம் பாவனையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இரண்டு முக்கிய முறைமைகளினை அறிமுகப்படுத்தியுள்ளது.


முழுமையான https முறைமை. அதாவது இதுவரை காலமும் தனது லொகின்(Login) க்கு மட்டும் பாவித்து வந்த https முறைமையினை இனி பாவனையாளர்கள் முழு ஃபேஸ்புக் பாவனையின் போதும் அனுபவிக்கக் கூடிய வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது.



https என்பது எமது கணணிக்கும் சேவருக்கும்(server) இடையிலான தரவுப் பரிமாற்றத்தினை பாதுகாப்புடையதாக மாற்றும் ஒரு முறைமையாகும்(https தொடர்பான விக்கிபீடியா பக்கம்). இந்த https பாதுகாப்பினை உங்கள் கணக்கில் செயற்படுத்த விரும்பினால் Account Settings க்கு சென்று Account Security பகுதியில் காணப்படும் secure browsing என்பதை தெரிவு செய்யுங்கள்.
இரண்டாவது Social Authentication , அதாவது உங்கள் ஃபேஸ்புக் கணக்கினை லொகின்(Login) செய்வது நீங்கள் தானா எனபதை உறுபடுத்திக்கொள்ளும் முறைமையாகும். வழமையான கெப்ட்சா(Captcha) முறைமை போல் இல்லாமல் இது ஃபேஸ்புக் ஸ்டைலிலான முறைமையாகும்.

இந்த சோஷியல் உறுதிப்படுத்தல் முறையானது உங்கள் நண்பர்களின் போட்டாக்களை காண்பித்து அது யார் என்று கேட்டுனிற்கும். இதன் மூலம் எமது ஃபேஸ்புக் கணக்கினை களவாடுவதோ அல்லது வேறு ஒருவர் பாவிப்பது கடினமாக்கப்படும்.
இந்த இரண்டு புதிய பாதுகாப்புத்திட்டங்களும் படிப்படியாக பாவனையாளர்கள் மத்தியில் பாவனைக்குவிடப்பட்டுள்ளது என்றும் மிகவிரைவில் இது உங்களையும் வந்து சேரும் என்றும்ஃபேஸ்புக் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Thanks to http://eseak.com

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...